
SMAT 2022: Himachal Pradesh beat Punjab by 13 runs to reach final (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான சயித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேசம் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஹிமாச்சல் அணியில் சோப்ரா 17, அன்குஷ் பைன்ஸ் 16, அபிமன்யூ ரானா 2 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த் சுமித் வெர்மா - ஆகாஷ் வாஸிஷ்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சுமிர் வெர்மா அரைசதம் கடக்க, மறுமுனையில் ஆகாஷ் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் பங்கஜ் ஜெய்ஸ்வால் 27 ரன்களைச் சேர்த்தார்.