
இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் திரிபுரா மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திரிபுரா அணியில் ஸ்ரீதம் பால் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் சம்ரத் 2 ரன்னிலும், கேப்டன் மந்தீப் சிங் 7 ரன்னிலும், ரியாஸ் உதின் 16 ரன்னிலும், முராசிங் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ஸ்ரீதம் பால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 57 ரன்களை எடுத்த நிலையில் ஸ்ரீதம் தம் பால் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஸ்ரீனிவாஸ் சரத் 29 ரன்களையும், அபிஜித் சர்க்கார் 15 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் திரிபுரா அணி 2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் நாக்வாஸ்வல்லா 3 விக்கெட்டுகளையும், சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.