SMAT 2024-25: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது டெல்லி அணி!
மணிப்பூர் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் டி20 போட்டியில் டெல்லி அணியானது தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சையத் முஷ்டாக் அலி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் மணிப்பூர் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்று முதலி பேட்டிங் செய்த மணிப்பூர் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிரியோஜித் சிங், சௌக்ரக்பம் சிங், ஜான்சன் சிங், ஜோடின், சிங்ககம் பிடாஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரெக்ஸ் சிங் - அஹ்மெத் ஷா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரெக்ஸ் சிங் 23 ரன்னிலும், அஹ்மெத் ஷா 32 ரன்னிலும் என ஆட்டமிழக்க மணிப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஹர்ஷ் தியாகி, திவ்னேஷ் ரதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு யாஷ் துள் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யாஷ் துள் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய பியன்ஷ் ஆர்யா 4 ரன்னிலும், கேப்டன் ஆயூஷ் பதோனி 13 ரன்னிலும், ஹிம்மத் சிங் ரன்கள் ஏதுமின்றியும், அனுஜ் ராவத் 4 ரன்னிலும், மயங்க் ராவத் 18 ரன்னிலும், ஆர்யா ரானா 13 ரன்னிலும் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் டெல்லி அணியும் ஒருகட்டத்தில் ரன்களைச் சேர்க்க தடுமாறியது.
இருப்பினும் இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய யாஷ் துள் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியதுடன் மணிப்பூர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த யாஷ் துள் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியின் போது டெல்லி அணி வரலாற்று சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணியானது விளையாடிய 11 பேரும் ப்ந்துவீசினர். அதிலும் குறிப்பாக அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஆயூஷ் பதோனியும், அனுஜ் ராவத்தும் தலா ஒரு ஓவர்களை வீசினர். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆடவர் அணியைச் சேர்ந்த பிளேயிங் லெவனில் இடம்பிடித்த 11 வீரர்களும் பந்துவீசியது இதுவே முதல்முறையாகும். முன்னதாக ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் ப்ந்துவீசியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது டெல்லி அணி முறியடித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now