மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - ஜார்ஜ் பெய்லி உறுதி!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதிசெய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. மேற்கொண்டு மிடில் ஆர்டர் வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், இத்தொடரில் இருந்து விலகியுள்ளதான் காரணமாக அவரது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Trending
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தனது பழைய பேட்டிங் வரிசையான 4ஆம் இடத்தில் களமிறங்குவார் என்று அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேமரூன் கிரீனின் காயம் காரணமாக தற்போது நாங்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது தொடக்க வீரர் இடத்தில் இருந்து பின்வாங்குவதாக கூறியுள்ளர்.
இதனால் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் ஸ்டீவ் ஸ்மித் 4ஆம் இடத்தில் விளையாடுவதை உறுதிசெய்துள்ளதுடன், அணியையும் மறுகட்டமைப்பு செய்துள்ளனர். இதனால் அணியின் நம்பர் 4ஆம் இடத்தை நாங்கள் உறுதிசெய்துள்ளதுடன், தொடக்க வீரருக்கான இடத்தை நிரப்பவும் ஆயத்தமாகி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஸ்டீவ் ஸ்மித் இனி மீண்டும் தனது 4ஆம் வரிசையில் பேட்டிங்கை தொடர்வார் என்பது உறுதியாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீரருக்கான தேடலில் ஆஸ்திரேலிய அணி இறங்கியுள்ளது. ஆனால் அணியின் அதிரடி வீரரான் டிராவிஸ் ஹெட்டை உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதேசமயம் மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராஃப்ட் உள்ளிட்டோரும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now