ஐசிசி மகளிர் டி20 அணி: 4 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்!
ஐசிசி உருவாக்கியுள்ள 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கும். அந்தவகையில் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 அணியை அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த வருடம் மிகச்சிறப்பாக விளையாடிய 11 வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. அந்தப் பட்டியலில் நான்கு இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள்.
அதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ரேனுகா சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 11 பேரில் இந்திய அணி மட்டுமே அதிகபட்சமாக 4 இடங்களைப் பிடித்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 அணி: ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), சோபி டெவின் (நியூசிலாந்து),ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தஹ்லியா மெக்ராத் (ஆஸ்திரேலியா), நிடா தர் (பாகிஸ்தான்), தீப்தி சர்மா (இந்தியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), இனோகா ரணவீரா (இலங்கை), ரேணுகா சிங் (இந்தியா).
Win Big, Make Your Cricket Tales Now