
Smriti Mandhana World Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் குவித்த உலகின் இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல்வும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யவும் முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.