
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிக்ளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணியில் புரூக் ஹாலிடே மற்றும் ஜார்ஜியா பிளிம்மரை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 86 ரன்களையும், ஜார்ஜியா பிளிம்மர் 39 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா தனது சதத்தையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதமும் அடித்து அசத்த இந்திய அணியின் வெற்றியும் எளிதானது.