
Smriti Mandhana ICC ODI Batting Rankings: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 727 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த அவர் தற்சமயம் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நாட் ஸ்கைவர் பிரண்டும் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். அதேசமயம் தென் முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியின் லாரா வோல்வர்ட் ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார். இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்க அணியின் தஸ்மின் பிரிட்ஸ் 5 இடங்கள் முன்னேறி 27ஆம் இடத்தையும், சுனே லூஸ் 7 இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.