
இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்மூலம் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்தது.
அதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது என அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தது.
ஆனால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியையும் கொடுத்திருந்தனர். அனாலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனத்தை சில வர்ணனையாளர் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்நிலையில் தான் தன்னை விமர்சித்தா வர்ணனையாளர்களை கடுமையாக சாடிய கம்பீர், இந்திய கிரிக்கெட்டை அவர்களின் தனிப்பட்ட சொத்தாக நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.