Advertisement

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்!

நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்களை விளாசிய ஆசிய வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் முறியடித்துள்ளார்.

Advertisement
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்!
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 20, 2023 • 12:58 PM

நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று உள்ளது. அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியின் துவக்க வீரர் சவும்யா சர்க்கார் தனி ஆளாக நின்று போராடி சதம் அடித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 20, 2023 • 12:58 PM

ஆனால், தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் நிலையாக நின்று சதம் அடித்தார். முதல் ஓவர் முதல் 49.1ஆவது ஓவர் வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய சௌமியா சர்க்கார் 151 பந்துகளில் 169 ரன்கள் குவித்தார். தனது ஆட்டத்தில் 22 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார்.

Trending

இதன்மூலம் 14 வருட சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். நியூசிலாந்து மண்ணில் 2009ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் அடித்து நாட் அவுட் ஆக இருந்தார். நியூசிலாந்து மண்ணில் ஆசிய வீரர் ஒருவர் ஒருநாள் போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். அந்த சாதனையை நியூசிலாந்து சென்ற வேறு எந்த ஆசிய வீராராலும் முறியடிக்க முடியாத நிலையில், சவும்யா சர்க்கார் அந்த சாதனையை 169 ரன்கள் குவித்து முறியடித்தார். 

மேலும், வங்கதேச வீரர் ஒருவர் வெளிநாட்டில் நடந்த ஒருநாள் போட்டியில் குவித்த அதிகபட்ச ரன் இதுதான். அதே போல, இந்தப் போட்டியில் 291 ரன்கள் குவித்தது வங்கதேசம். ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 

வங்கதேசம் அணி மற்றும் சவும்யா சர்க்கார் இத்தனை சாதனைகள் செய்தும் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் வில் யங் 89 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 95 ரன்களும் எடுத்தனர். அதை அடுத்து நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement