ரோஹித் சர்மா ஃபார்ம் குறித்து கங்குலி கருத்து!
ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் பற்றி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் சரியாக ஆடவில்லை.
5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இந்த சீசனை முடித்தது. அதற்கு முக்கிய காரணம், ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தான்.
Trending
ரோஹித் சர்மா 14 போட்டிகளில் 19.17 என்ற சராசரி மற்றும் 120 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் வெறும் 268 ரன்கள் மட்டுமே அடித்தார் ரோஹித். ரோஹித்தின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.
இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என பெரிய ஐசிசி தொடர்களில் ஆடவுள்ளதால் ரோஹித்தின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்நிலையில், ரோஹித்தின் மோசமான ஃபார்ம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கங்குலி, “அனைவரும் மனிதர்கள் தான். எனவே தவறுகள் நடப்பது இயல்பு. ரோஹித்தின் கேப்டன்சி ரெக்கார்டு சிறப்பானது. 5 ஐபிஎல் டைட்டில், ஆசிய கோப்பை வெற்றி என அவர் கேப்டன்சி செய்த அனைத்து தொடர்களையும் வென்றிருக்கிறார். நல்ல கேப்டன்சி ரெக்கார்டை வைத்துள்ள ரோஹித்தும் மனிதர் தான். எனவே தவறு நடக்கத்தான் செய்யும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now