Advertisement

இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கிய கங்குலி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார்.

Advertisement
Sourav Ganguly suggests what India should do if they win toss in WTC Final
Sourav Ganguly suggests what India should do if they win toss in WTC Final (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 18, 2021 • 01:54 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் சில மணி நேரத்தில் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 18, 2021 • 01:54 PM

இப்போட்டிக்கான இந்திய அணி  6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.

Trending

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார். 

இதுகுறித்து பேசிய கங்குலி, “உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது.

இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முதலில் பேட்டிங் செய்யும் போது எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். 2002ஆம் ஆண்டு லீட்ஸ், 2018ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் நாம் முதலில் பேட்டிங் செய்தோம். ஆரம்ப அழுத்தத்தை சமாளித்து ரன்களை எடுத்தோம். அப்படிதான் அந்த போட்டிகளில் வென்றோம்.

காலை வேளையில் மேக மூட்டமாக இருந்தாலும் இந்திய அணி டாஸ் ஜெயித்தால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அணிக்கு சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 20 ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும்.

இது புஜாரா, கோலி, ரஹானே, ரி‌ஷப் பந்த் ஆகியோருக்கு நல்ல அடித்தளத்தை அமைக்க உதவும். கடந்த 30-35 ஆண்டுகளில் இதுதான் சிறந்த நியூசிலாந்து அணி. அவர்கள் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளதால் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement