
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரானது தற்போது கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்படி டி20 போட்டிகள் வரும் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் நாள் முதல் 8ஆம் நாள் வரை முதலாவது டெஸ்ட் போட்டியும், மார்ச் 12 முதல் 16 வரை பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும் என்று முடிவாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 28 வயதான சவுரவ் குமார் என்கிற வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.