
டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்சிக்கான இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் பாட் காம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
அதேசமயம் ஐசிசி தொடர்களில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இம்முறை தங்களின் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் களமிறங்கவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான் இரு அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
South Africa announces their playing XI for the WTC Final against Australia! pic.twitter.com/neiBB3oOWn
— CRICKETNMORE (@cricketnmore) June 10, 2025