Advertisement

ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ரஸ்ஸி வேண்டர் டுசென் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே, நியூசிலாந்து முத்தரப்பு டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 26, 2025 • 02:58 PM

South Africa T20I Team: ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், குவேனா மபாகா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 26, 2025 • 02:58 PM

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியானது, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

இதில் ஜிம்பாப்வே அணி முதலாவதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த முத்தரப்பு தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக ராஸ்ஸி வான் டெர் டுசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, 4 அறிமுக வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் இந்த டி20 அணியில் கார்பின் போஷ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரூபின் ஹெர்மன் மற்றும் செனுரான் முத்துசாமி ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ், குவேனா மபாகா, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜெரால்ட் கோட்ஸி மற்றும் நந்த்ரே பர்கர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதேசமயம் இந்த அணியில் வழக்கமான கேப்டன் ஐடன் மார்க்ராம், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நோர்ட்ஜே  மற்றும் தப்ரெஸ் ஷம்சி போன்ற நட்சத்திர வீரர்கர்களுக்கு இடம் கிடைக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ரஸ்ஸி வான் டெர் டுசென் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நாந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி என்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஆண்டிலே சிமெலேன்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement