
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 298 ரன்களை குவித்தது. 299 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் சதமடித்தும் கூட (91 பந்தில் 113 ரன்கள்) அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதால் 271 ரன்கள் மட்டுமே அடித்து 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ஜனவரி 29ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டியிலும் ஜெயித்து ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க 2ஆவது போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வெற்றி முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்குகின்றன. எனவே போட்டி கடுமையாக இருக்கும்.