
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி, நேற்று முந்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே தொடரை வென்றுள்ள நிலையில், கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் விளையாடவுள்ளது.
அதேசமயம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ளதால், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெறவேண்டும் என் நோக்கில் களமிறங்கவுள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரி ப்ரூக், ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோரும், பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.