
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விலையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்கில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் டீன் எல்கர் - ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் டீன் எல்கர் 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்தார். அதன்பின் களமிறங்கிய ஸோர்ஸியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் இருவரும் சதமடிபார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸோர்ஸி 85 ரன்களிலும், ஐடம் மார்க்ரம் 96 ரன்களிலும் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.