Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பின்றி தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி ஹென்ரிச் கிளாசென் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 08, 2024 • 05:32 PM

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற அந்த அணி தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 08, 2024 • 05:32 PM

ஆனாலும் 2ஆவது போட்டியில் 55 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்ல முடியாமல் பகிர்ந்து கொண்டது. மேலும் அந்த தொடருடன் நட்சத்திர தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கையொப்பமிட்ட இந்திய அணியின் சிறப்பை பரிசாக வழங்கி பாராட்டி வழியனுப்பினார்கள்.

Trending

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மற்றொரு நட்சத்திர தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் 5,347 ரன்களை 46 என்ற நல்ல சராசரி குவித்துள்ள அவர் கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

இருப்பினும் அறிமுகமானது முதல் கடந்த 4 வருடங்களில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற அவர் 104 ரன்களை 13 என்ற சராசரியில் எடுத்து சற்று சுமாராகவே செயல்பட்டார். அதன் காரணமாக நடைபெற்று முடிந்த இந்திய டெஸ்ட் தொடரில் அவருக்கு பதிலாக கெய்ல் வேர்ரையன் வாய்ப்பு பெற்றார். அந்த வகையில் தமக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கருதியதாலோ என்னவோ தெரியவில்லை தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இருப்பினும் கடந்த 2023 உலகக் கோப்பையில் அட்டகாசமாக விளையாடி இந்திய ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது உட்பட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கிளாஸன் அறிவித்துள்ளார்.

இது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், “சில தூங்காத இரவுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக நான் முடிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. களத்திலும் களத்திற்கும் வெளியேயும் நான் போராடிய காரணத்தாலேயே இன்று வீரராக இருக்கிறேன். அந்த பயணத்தில் என்னுடைய நாட்டுக்காக விளையாடியதை அருமையாக கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுகாக எனக்கு கிடைத்தது தான் மிகவும் பிடித்த தொப்பி” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement