
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மே 29ஆம் தேதியுடன் இத்தொடர் முடிவடைகிறது. இந்த தொடரை முடித்தவுடன் தென் ஆப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மோதுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு தான் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு தந்துவிட்டு, ஐபிஎல் தொடரில் கலக்கி வீரர்களுக்கு வாய்ப்பு தருகின்றனர்.
அதாவது கடந்தாண்டை போலவே இந்திய மெயின் அணிக்கு பதிலாக ஷிகர் தவான் தலைமையில் புதிய அணி ஒன்றை உருவாக்கவுள்ளனர். இந்திய மெயின் அணியை ஜூலையில் வரவுள்ள இங்கிலாந்து தொடருக்காக தயார் படுத்தவுள்ளனர். பலமான தென்னாப்பிரிக்க அணியை எப்படி புதிய படை சமாளிக்கும் என்பதில் ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.