நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்!
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தொடர்ந்து வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் மூன்று வடிவிலான அணிகளுக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்டு வந்தார். 32 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2016 வாக்கில் அனைத்து பார்மெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதிலும் கடந்த 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
Trending
இந்நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அவர் விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் அந்த அணியின் கேப்டனாக அனுபவ வீரர் டிம் சவுதி செயல்பட உள்ளார்.
தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியை வில்லியம்சன் வழிநடத்துவார் என நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அந்த அணியின் துணை கேப்டனாக டாம் லேதம் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now