Advertisement
Advertisement
Advertisement

சூப்பர் ஓவரில் பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் த்ரில் வெற்றி - வைரலாகும் காணொளி!

சதர்ன் பிரேவ் மற்றும் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சூப்பர் ஓவர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

Advertisement
சூப்பர் ஓவரில் பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் த்ரில் வெற்றி - வைரலாகும் காணொளி!
சூப்பர் ஓவரில் பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் த்ரில் வெற்றி - வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 18, 2024 • 02:26 PM

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் மற்றும் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சதர்ன் பிரேவ் அணியானது இன்னிங்ஸில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 43 ரன்களையும், லூயிஸ் டூ ப்ளூய் 39 ரன்களையும் எடுத்தனர். ஃபீனிக்ஸ் அணி தரப்பில் ஆடம் மில்னே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 18, 2024 • 02:26 PM

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பர்மிக்ஹாம் ஃபீனிக்ஸ் அணியானது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் அந்த அணியும் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டோன் 55 ரன்களைச் சேர்த்திருந்தார். 

Trending

இதனால் இப்போட்டியானது சமனில் முடிவடைந்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றனது. பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியானது 6 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் பிரேவ் அணியானது 4 பந்துகளிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு மிக்கிய பங்காற்றிய ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான சூப்பர் ஓவர் குறித்த முழு காணொளியை தி ஹண்ட்ரட் நிர்வாகம் தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சதர்ன் பிரேவ் மற்றும் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த சூப்பர் ஓவர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement