Advertisement
Advertisement
Advertisement

Birmingham phoenix vs southern brave

சூப்பர் ஓவரில் பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் த்ரில் வெற்றி - வைரலாகும் காணொளி!
Image Source: Google
Advertisement

சூப்பர் ஓவரில் பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் த்ரில் வெற்றி - வைரலாகும் காணொளி!

By Bharathi Kannan August 18, 2024 • 14:26 PM View: 67

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் மற்றும் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சதர்ன் பிரேவ் அணியானது இன்னிங்ஸில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 43 ரன்களையும், லூயிஸ் டூ ப்ளூய் 39 ரன்களையும் எடுத்தனர். ஃபீனிக்ஸ் அணி தரப்பில் ஆடம் மில்னே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பர்மிக்ஹாம் ஃபீனிக்ஸ் அணியானது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் அந்த அணியும் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டோன் 55 ரன்களைச் சேர்த்திருந்தார். 

Advertisement

Related Cricket News on Birmingham phoenix vs southern brave