
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 11* (5) ரன்கள் எடுத்திருந்தபோது காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்டாகி சென்றார். அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
அவருடன் மெதுவாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 (44) ரன்களை வெளுத்து வாங்கி வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார்.
அதன் காரணமாக 19 ஓவரிலேயே 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருந்த இத்தொடரில் மீண்டும் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 76 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆனால் அவருடன் வெறும் பெயருக்காக கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஸ்ரேயஸ் ஐயர் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.