
Sunrisers Hyderabad vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவதாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SRH vs RR: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - இரவு 7.30 மணி
SRH vs RR: Pitch Report
பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோர்கள் குவிக்க கூடிய மைதானங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. மேலும் இப்போட்டியானது இரவில் நடைபெறவுள்ளதால் நிச்சயம் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
SRH vs RR: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 19
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 10
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 09
SRH vs RR: Live Streaming Details
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம்.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals Predicted Teams
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்