இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; வங்கதேசம், இலங்கை எதிர்ப்பு!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றன.
நடப்பு ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆனால் அணிகளின் போட்டியால் ஏற்பட்ட பரபரப்பு இது கிடையாது. போட்டியை இலங்கையில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கும் பரபரப்பு இது. தற்பொழுது நடப்பு ஆசியக் கோப்பையில் இலங்கையில் முதல் சுற்று போட்டிகளின் போது மழை குறுக்கீட்டால், இந்திய அணி மோதிய இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டது. இது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இதற்கு அடுத்து இரண்டாவது சுற்று யார் யார் முன்னேறுவார்கள் என்பது குறித்து தெளிவான பார்வை இருக்காது என்பதால், இரண்டாவது சுற்றில் ஒருபோட்டி மட்டுமே பாகிஸ்தானிலும், மீதி போட்டிகள் இலங்கை கொழும்பு மைதானத்தில் நடத்துவதாகவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இடையில் கொழும்புவில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால் இலங்கையின் மற்றொரு இடமான ஹம்பன்தோட்டாவில் போட்டிகள் நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென அந்த முடிவு கைவிடப்பட்டு மீண்டும் கொழும்பு மைதானமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
Trending
இந்த நிலையில் கொழும்பு மைதானத்தில் போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால், இந்தியா - பாகிஸ்தான் செப்டம்பர் 10ஆம் தேதி மோதிக் கொள்ளும் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டது. 10ஆம் தேதி மழையால் போட்டி எந்த இடத்தில் பாதிக்கப்படுகிறதோ, அங்கிருந்து 11ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்று சொல்லப்பட்டது. ஒருவேளை அந்த நாளும் மழை வந்தால் போட்டி டிராவில் முடியும். இல்லை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில் தற்பொழுது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றன. இது தற்போது புது சர்ச்சையாக தற்பொழுது இது மாறி இருக்கிறது.
இதுகுறித்து வங்தேச தலைமை பயிற்சியாளர் ஹதுரசிங்க கூறுகையில், “இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே வைத்திருப்பது சரியான ஒரு முடிவு கிடையாது. ஆனால் அவர்கள் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்து விட்டார்கள். எங்களிடம் அவர்கள் கலந்து ஆலோசித்து இருந்தால், நாங்கள் இது சம்பந்தமாக எங்கள் முடிவையும் தெரிவித்திருப்போம்” என்று கூறினார்.
இதுகுறித்து இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட் கூறுகையில், “ஆமாம்! பாருங்கள், நான் இதை முதல்முறையாக கேள்விப்பட்ட பொழுது மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் தொடரை நாங்கள் நடத்தவில்லை. இதனால் நாங்கள் இது குறித்து முழுவதுமாக முடிவு செய்ய முடியாது இல்லையா” என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now