
Sri Lanka T20 squad: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தசுன் ஷனகா மற்றும் சமிகா கருணரத்னே உள்ளிட்டோருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதையடுத்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிக்கப்பட்டது.