
Sri lanka beat South Africa By 14 runs (Image Source: Google)
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதமடித்தும், சரித் அசலங்கா அரைசதம் விளாசியும் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 118 ரன்களையும், சரித் அசலங்கா 72 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.