
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குசால் மெண்டிஸ் தலைமையிலான இந்த அணியில் லஹிரு குமாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக துஷ்மந்தா சமீரா, ஷெவோன் டேனியல், தனஞ்செயா டி சில்வா ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். அதேசமயம் டி20 தொடரிலிருந்து விலகியிருந்த பதும் நிஷங்கா இந்த ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.