
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அக்டோபர் 13ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அக்டோபர் 20ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இலங்கை அணியோ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பிறகு எதிர்கொள்ளும் முதல் டி20 தொடர் இதுவாகும்.
இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில் ஓராண்டுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள பானுகா ராஜபக்ஷாவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.