
இலங்கைக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதலாவது டெஸ்ட் காலேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது.
இதில்தனது 15ஆவது சதத்தை எட்டிய கேப்டன் திமுத் கருணாரத்னே 178 ரன்களும் , 8ஆவது சதம் அடித்த குசல் மென்டிஸ் 140 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமல் 18 ரன்களுடனும், ஜெயசூர்யா 12 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் ஜெயசூர்யா 16 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த் தினேஷ் சண்டிமல் - சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் சதமடித்தும் அசத்தினர்.