'இலங்கையின் நிலை அறிந்து பேசவும்' - ரணதுங்கா கேள்விக்கு ஆகாஷ் சோப்ராவின அசத்தல் பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைமையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்துள்ளது.
Trending
இலங்கையுடன் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார், சஹால், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சக்காரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, இலங்கைக்கு 2ஆம் தர இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.
இந்நிலையில் அர்ஜுன ரணதுங்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப்பில் கடுமையாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ''ரணதுங்கா கூறியது முற்றிலும் உண்மைதான். இலங்கைக்குச் சென்றுள்ளது, முழுமையான இந்திய அணி அல்லதான். பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இல்லை. ஆனால், இலங்கையில் உள்ள இந்திய அணியைப் பார்த்தால் பி டீம் போலவா இருக்கிறது?
இந்திய அணியின் உத்தேச 11 வீரர்கள் கொண்ட ஒருநாள் அணியை எடுத்துக்கொண்டால் மொத்தமாக 471 போட்டிகளில் விளையாடியுள்ளது. இலங்கை அணியை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் சேர்த்தால் கூட இத்தனை போட்டிகளில் விளையாடியிருப்பார்களா எனப் பார்க்கலாம். ஒவ்வொரு போட்டியின் அனுபவத்தோடு, அனுபவத்தை ஒப்பிடும்போதுதான் உற்சாகமானதாக அமையும்.
இப்போதுள்ள இலங்கை அணியின் ஃபார்ம் குறித்து ஏதாவது கூற வேண்டுமா? டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தகுதிச்சுற்றில் விளையாடிய வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது. ஆனால், புதிதாக வந்த ஆப்கானிஸ்தான் அணி கூட தகுதிச்சுற்றில் விளையாடவில்லை.
இப்போதுள்ள நிலையில் தடுமாற்றம் அடைந்த அணியாக இலங்கை இருப்பதே நிதர்சனம். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெறாத நிலைகூட ஏற்படலாம். சூப்பர்12 சுற்றுக்குக் கூட வராமல் போகலாம். ஆனால், ஆப்கானிஸ்தான் இதையெல்லாம் கடந்துவிட்டது என்பது நினைவிருக்கட்டும்'' என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now