
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெற்றவுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
அந்தவகையில் சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரரான சமிந்து விக்ரமசிங்கேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோருடன், சுழற்பந்து வீச்சாளர்கள் மஹீர் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே மற்றும் ஜெஃப்ரி வான்டர்சே ஆகியோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.