
Sri Lanka vs Bangladesh Dream11 Prediction Match 15, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். இத்தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய முதல் போட்டியிலேயே இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. மறுபக்கம் வங்கதேச அணியானது நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கள் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு கடந்த காலங்களில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் வீரர்களுக்கு இடையே பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL vs BAN: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
- இடம் - கிராண்ட் ப்ரேரி மைதானம், டல்லாஸ்
- நேரம் - ஜூன் 08ஆம் தேதி காலை 6 மணி (இந்திய நேரப்படி)