
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 14 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி பேட்ஸ்மேன் அதை அடிக்க முடியாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதன்பிறகு, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினார், ஆனால் மற்ற வீரர்கள் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். அந்த போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது, ஒட்டுமொத்த அணியும் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்ம்புவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இலங்கை 1-0 என முன்னிலையில் இருப்பதால், அழுத்தம் இந்திய அணி மீது உள்ளதால், இப்போட்டியின் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். இருப்பினும், இந்த போட்டியின் போது மழை இடையூறு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
கொழும்புவில் நாளைக்கான வானிலை அறிக்கையின் படி இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கொண்டு காற்றின் வேகம் அதிகரிப்பதுடன்ம் மோகமூட்டமான வானிலையே நிலவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் நாளைய போட்டியானது மழையால் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இப்போட்டியானது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்படும்.