Advertisement
Advertisement
Advertisement

SL vs SA, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 03, 2021 • 13:54 PM
Sri Lanka vs South Africa, 2nd ODI – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Sri Lanka vs South Africa, 2nd ODI – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

Trending


இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள பிரமதசா மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - இலங்கை vs தென் ஆப்பிரிக்க
  •     இடம் - பிரமதசா மைதானம், கொழும்பு
  •     நேரம் - பிற்பகல் 3 மணி

போட்டி முன்னோட்டம்

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியை வென்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

அதிலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா ஆகியோர் பேட்டிங்கில் அபாரமாக விளையாடியது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. மேலும் பந்துவீச்சாளர்களும் தங்களது பணியை திறம்பட செய்துள்ளதால் அணிக்கு புது உற்சாகம் வந்துள்ளது.

ஆனால் கடைசிவரை போராடிய தென் ஆப்பிரிக்க அணியால் நேற்றைய போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. அணியின் பேட்டிங்கில் ஐடன் மார்க்ரம், வென்டர் டுசன் ஆகியோர் சிறப்பாக விளையாடிய பட்சத்திலும் இறுதி கட்ட பேட்ஸ்மேன்களால் இலக்கை எட்ட முடியவில்லை. 

பந்துவீச்சு தரப்பிலும் பவுலர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளைக் கைப்பற்ற தவறியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இனி வரும் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி தவறுகளைத் திருத்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  •     மோதிய ஆட்டங்கள் - 78
  •     இலங்கை வெற்றி - 34
  •     தென் ஆப்பிரிக்க வெற்றி -44
  •     முடிவில்லை - 2

உத்தேச அணி
இலங்கை -
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுக, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா (கே), வாநிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீரா, பிரவின் ஜெயவிக்ரமா.

தென் ஆப்பிரிக்கா - ஜென்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், டெம்பா பாவுமா (கே), ரஸ்ஸி வான்டெர் டூசன், கைல் வெர்ரெய்ன், ஹென்ரிச் கிளாசென், ஆண்டிலே பெஹ்லுக்வயோ, கேசவ் மகராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, ககிசோ ரபாடா.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!


ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - மினோத் பானுகா, ஹென்ரிச் கிளாசென்
  •     பேட்ஸ்மேன்கள் - அவிஷ்கா ஃபெர்னாண்டோ, ஜென்மேன் மாலன், ராஸி வான்டெர் டூசன், ஐடன் மார்க்ரம்
  •     ஆல் -ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்கா, 
  •     பந்து வீச்சாளர்கள் - சாமிகா கருணரத்னே, துஷ்மந்த சமீரா, தப்ரைஸ் ஷம்ஸி, ககிசோ ரபாடா


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement