Advertisement
Advertisement
Advertisement

ஆசிய கோப்பை 2023: இறுதிப்போட்டியில் தீக்‌ஷனா விளையாடுவாரா?

தொடைப் பகுதியில் ஏற்பட்டகாயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக் ஷனா பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan September 16, 2023 • 15:25 PM
ஆசிய கோப்பை 2023: இறுதிப்போட்டியில் தீக்‌ஷனா விளையாடுவாரா?
ஆசிய கோப்பை 2023: இறுதிப்போட்டியில் தீக்‌ஷனா விளையாடுவாரா? (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்தது. மெத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் முன்னேறின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.   

இந்நிலையில், இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனா, ஆசிய கோப்பைதொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்குஎதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடைப்பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்துகொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

Trending


இதன் முடிவு வெளிவந்த பின்னரே அவர், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா? என்பது தெரியவரும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீக் ஷனா பலமுறை பீல்டிங்கின் போது வெளியே சென்றார். இருப்பினும் பந்து வீச்சில் தனது 9 ஓவர்களையும் முழுமையாக வீசினார். 

உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் ஏற்கெனவே முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு மதுஷங்கா, லகிரு குமரா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது தீக்ஷனாவின் காயமும் இலங்கை அணியை கவலையடையச் செய்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement