சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உதானா!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா இன்று அறிவித்தார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இசுரு உதானா. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக 2009 டி20 உலகக் கோப்பையில் இசுரு உதானா அறிமுகமானார். இதுவரை 21 ஒருநாள், 34 டி20 விளையாடியுள்ள இவர் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவர் கடைசியாக சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிவுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடினார். ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்திலும், டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய இவர், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
Trending
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,“அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். மகத்தான பெருமையுடனும், ஆர்வத்துடனும், அளவிட முடியாத அர்ப்பணிப்புடனும் நான் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி சேவை செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று உதனா தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் விளையாடிய ஒரே இலங்கை வீரரும் உதானா தான். விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 10 ஆட்டங்களில் விளையாடிய இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now