
இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ரோஹித், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்திய அணிக்கு ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஷிகர் தவான் (72), தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் (50), ஷ்ரேயாஸ் ஐயர் (80) ஆகியோர் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரு போட்டியில், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ரன்கள் அடிப்பதற்கு போராடிய பந்த், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்து வருகிறார். யூடியூப்பில் நியூசிலாந்தில் பந்தின் ஆட்டத்தை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீகாந்த், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பந்திற்கு ஓய்வு அளிக்குமாறு இந்திய சிந்தனைக் குழுவை வலியுறுத்தியுள்ளார்.