
Star all-rounder returns to Bangladesh squad for Afghanistan ODIs (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்று,ம் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 546 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. தொடரின் முதலாவது போட்டி அடுத்த மாதம் 5ஆம் தேதி சட்டோகிராமில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மொஹமது நைம், ஆபிப் ஹொசைன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். வங்கதேச அணியை தமிம் இக்பால் வழிநடத்துகிறார்.