
Star India cricketer in Mark Waugh's list of Top 5 T20I players ahead of T20 World Cup (Image Source: Google)
டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சமகாலத்தின் டாப் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் மார்க் வாக்.
ஜஸ்ப்ரித் பும்ரா, ஷாஹீன் அஃப்ரிடி, ரஷீத் கான், ஜோஸ் பட்லர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய 5 வீரர்களையும் டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்களாக தேர்வு செய்துள்ளார் மார்க் வாக்.
இதுகுறித்து பேசிய மார்க் வாக், “பும்ரா அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் மிகச்சிறந்த பவுலர். டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் வீழ்த்தும் திறன் தான் முக்கியமானது. டெத் ஓவர்களை அருமையாக வீசும் பும்ரா, தொடக்கத்திலும் சிறப்பாக வீசவல்லவர்.