
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 37 ரன்களில் பில் சால்ட்டும், 22 ரன்களில் விராட் கோலியும் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் 25 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் பில் சால்ட் அதிரடியாக விளையாடிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.