
Starc, Gardner claim top honours at Australian Cricket Awards (Image Source: Google)
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்படுவார்கள். வீரர்கள், நடுவர்கள், பத்திரிகையாளர்கள் அடங்கிய ஒரு குழு இவ்விருதுகளுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும்.
அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலிய வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வாகியுள்ளார். 2ஆம் இடம் பிடித்த மிட்செல் மார்ஷை விடவும் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
ஸ்டார்க்குக்கு 107 வாக்குகளும், மார்ஷுக்கு 106 வாக்குகளும், மூன்றாம் இடம் பிடித்த டிராவிஸ் ஹெட்டுக்கு 72 வாக்குகளும் கிடைத்தன.