Advertisement

இந்திய தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகல்!

இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளநிலையில் அந்த அணியின் 3 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர்.

Advertisement
Starc, Marsh & Stoinis Out Of Upcoming T20Is Against India Due To Injuries
Starc, Marsh & Stoinis Out Of Upcoming T20Is Against India Due To Injuries (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 15, 2022 • 11:45 AM

இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளநிலையில் அந்த அணியின் 3 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 20ஆம் தேதி மொஹாலியிலும், 23ஆம் தேதி நாக்பூரிலும், 25ஆம் தேதி ஹைதராபாத்திலும் டி20 போட்டிகள் நடக்கின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 15, 2022 • 11:45 AM

இந்தப் போட்டியில் பங்கேற்க வரும் ஆஸ்திரேலியஅணியில் இருந்து ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ், மிஸ்ஷெல் ஸ்டார்க், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஷ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
ஸ்டார்க்கிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, மார்ஷ், ஸ்டாய்னிஷுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் 3 பேரும் விலகியுள்ளனர்.

Trending

விரைவில் டி20 உலகக் கோப்பை நடக்க இருப்பதால், 3 வீரர்களின் உடல்நலத்திலும் விளையாட விரும்பவில்லை. காயம் சிறிதுதான் என்றாலும் வீரர்களின் உடல்நலன் முக்கியம். ஆதலால், 3 வீரர்களும் இந்தியத் தொடரில்விளையாடமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியகிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே டேவிட் வார்னர் தனக்கு ஓய்வு தேவை என்று இந்தியத் தொடரிலிருந்து விலகிவிட்டார். இதனால், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ், சீன் அபாட் ஆகியோர், ஸ்டார்க், மார்ஷ், ஸ்டாய்னிஷ் ஆகியோருக்குப் பதிலாகச் சேர்க்கப்படுவார்கள். 

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, மார்ஷ், ஸ்டாய்னிஷ் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஸ்டார்க் அந்தத் தொடரில் விளையாடினாலும் முழங்காலில் காயம் இருப்பது ஸ்கேன் செய்தபின்பு தெரியவந்ததால் அவரும் விளையாடவில்லை. இந்தியத் தொடருக்குப்பின் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement