Advertisement

IND vs WI: இந்திய அணி தரப்பில் அதிக சதங்கள் & விக்கெட்டுகள்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் குறித்த பதிவு.

Advertisement
Stats: Highest Individual Scores In India vs West Indies ODIs
Stats: Highest Individual Scores In India vs West Indies ODIs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 05, 2022 • 06:28 PM

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 05, 2022 • 06:28 PM

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை பிப்ரவரி 6 மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Trending

இந்த தொடரில் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோல் சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமையில் சாதாரண வீரராக விளையாட உள்ளார். 

இவர்களுடன் ரிஷப் பண்ட், ஷார்துல் தாகூர், சிராஜ் என பல அனுபவம் கலந்த இளம் வீரர்களுடன் இந்த தொடரில் களமிறங்கும் இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரை வெற்றி பெற தயாராக உள்ளது.

மறுபுறம் கீரன் பொல்லார்ட் தலைமையில் நிக்கோலஸ் பூரன், சாய் ஹோப், ஜேசன் ஹோல்டர் என பல நட்சத்திரங்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்தியாவுக்கு சவால் அளிக்கக்கூடிய அணியாக விளங்குகிறது. எனவே அந்த அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சரி இந்த தொடரை முன்னிட்டு வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டிகளின் வரலாற்று புள்ளி விவரங்களைப் பற்றி பார்ப்போம்.

  • ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை மொத்தம் 133 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 64 வெற்றிகளையும் வெஸ்ட் இண்டீஸ் 63 வெற்றிகளையும் பெற்று சம பலத்துடன் உள்ளன. 2 போட்டியில் டையில் முடிய 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
  • குறிப்பாக இந்த தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் வரலாற்றில் 58 போட்டிகளில் பலப்பரிட்சை நடத்தியுள்ளன. அதிலும் இந்தியா 29 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் 28 போட்டிகளிலும் வெற்றி பெற்று சம பலத்துடன் காணப்படுகின்றன. 1 போட்டி டையில் முடிந்தது.
  • வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்டராக நட்சத்திர வீரர் விராட் கோலி 2235* ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1573 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள்

1. விராட் கோலி : 2235 ரன்கள் (39 போட்டிகள்)
2. சச்சின் டெண்டுல்கர் : 1573 (33 போட்டிகள்)
3.ரோஹித் சர்மா : 1523 ரன்கள் (33 போட்டிகள்)
4. ராகுல் டிராவிட் : 1348 ரன்கள் (40 போட்டிகள்)
5. சௌரவ் கங்குலி : 1142 (27 போட்டிகள்)

அதிக சதங்கள் :

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்டராகவும் விராட் கோலி 9 சதங்களுடன் முதலிடம் பிடித்து சாதனை உள்ளார். இப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 4 சதங்களுடம் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதிகபட்ச ஸ்கோர்:

கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தூர் நகரில் நடந்த ஒருநாள் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்து 219 ரன்களை விளாசிய வீரேந்திர சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய பேட்டராக சாதனை படைத்துள்ளார். அதே போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோரான 418 ரன்களை பதிவு செய்துள்ளது.

அதிக விக்கெட்கள்:

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலராக முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் 43 விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் அனில் கும்ப்ளே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 41 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளனர்.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் :
1. கபில் தேவ் : 43 விக்கெட்கள் (42 போட்டிகள்)
2. ரவீந்திர ஜடேஜா/அனில் கும்ப்ளே : தலா 42 விக்கெட்கள்
3. முகமத் ஷமி : 37 விக்கெட்கள் (18 போட்டிகள்)
4. ஹர்பஜன் சிங் : 33 விக்கெட்கள் (31 போட்டிகள்)
5. அஜித் அகர்கர் : 31 விக்கெட்கள் (24 போட்டிகள்)

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement