
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக கடந்த பிப்ரவரி 6ஆஆம் தேதியன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 – 0 என ஒயிட்வாஷ் பெற்றியை பதிவு செய்து கோப்பையை முத்தமிட்டது.
அதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து புதிய சாதனையையும் இந்தியா படைத்தது.
இதை அடுத்து இந்த 2 அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கபதற்காக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.