
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒய்ட் வாஷ் செய்து ஆஸ்திரேலியா வென்றது. அந்த தொடரில் நட்சத்திர ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் அனைவரது பாராட்டுக்கு மத்தியில் பிரியாத மனதுடன் விடை பெற்றார்.
கடந்த 2015, 2023 ஆகிய உலகக் கோப்பைகள் மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உதவிய அவர் நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நிறை வெற்றிகளில் பங்காற்றினார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடினாலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அவருடைய இடத்தை நிரப்பப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அது போன்ற சூழ்நிலையில் அணி நிர்வாகம் விரும்பினால் தாம் தொடக்க வீரராக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 4ஆவது இடத்தில் விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித் தம்முடைய அனுபவத்தால் ஓப்பனிங் இடத்திலும் அசத்தக் கூடிய திறமையைக் கொண்டுள்ளதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் மிடில் ஆர்டரை விட ஓபனிங் இடத்தில் சிறப்பாக விளையாடி பிரைன் லாராவின் 400 ரன்கள் உலக சாதனையை ஸ்மித் முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒருவேளை தொடக்க வீரராக ஸ்மித் விளையாட விரும்பினால் அதை செய்ய ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன். பட் கமின்ஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டியை வைத்து பார்க்கும் போது இது சிறிய மாற்றமாக இருக்கலாம். அதே சமயம் ஸ்மித் மிடில் ஆர்டரில் தொடர்ந்து விளையாடினால் டேவிட் வார்னர் இடத்தில் கேமரூன் கிரீன் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. அல்லது ஸ்மித் ஓப்பனிங் வீரராக விளையாடினால் கேமரூன் கிரீன் 4 அல்லது 6ஆவது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.