Advertisement

விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

விராட் கோலி ஒரு அபாரமான வீரர். அவர் எப்பொழுதும் பெரிய கேம்களில் சிறப்பாக விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan September 15, 2023 • 15:13 PM
விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு! (Image Source: Google)
Advertisement

தற்கால கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டுமே ஒரு தனித்துவமான வீரராக விளங்கி வருகிறார். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட வடிவம் என்று இல்லாமல், மூன்று வடிவத்திலும் முத்திரையை பதிக்கக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்கிறார். இவருடன் சேர்த்து பேசப்படும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாட்டை கொண்டு இருக்கிறார்.

அதேபோல் ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டும் இந்த இரண்டு கிரிக்கெட் வடிவங்களில் சிறப்பாக இருக்கிறார். ஆனால் விராட் கோலி மட்டும்தான் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சீரான மற்றும் சீரிய செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். இந்த விதத்தில் விராட் கோலிக்கு எப்பொழுதும் ஒரு தனித்துவம் இருக்கிறது.

Trending


சமீபக் காலங்களில் விராட் கோலியுடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை ஒப்பீடு வைத்து பேசப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் விராட் கோலி இவருக்கும் வேறுபட்ட ஒருவராக இருக்கிறார். பாபர் ஆசாமை விட டி20 கிரிக்கெட்டில் கியர் மாற்றி, உலகின் எந்த ஆடுகளங்களிலும் விளையாடும் திறமை விராட் கோலிக்கு உண்டு. கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவே ஆஸ்திரேலியாவில் காட்டி இருப்பார்.

அப்படியான ஒரு ஆடுகளத்தில் அவ்வளவு பெரிய மைதானத்தில், அது சாத்தியம் இல்லாத விஷயம். மேலும் விராட் கோலி அழுத்தம் நிறைந்த பெரிய போட்டிகளில் சாதிப்பதையே வழக்கமாக வைத்திருப்பவர். இப்படியான காரணங்களால் பாபர் ஆசாமும் அவருடன் வர முடியாது. எனவே உலகில் ஒரே ஒரு விராட் கோலிதான் என்று பல முன்னாள் வீரர்கள் சொல்வார்கள்.

தற்பொழுது விராட் கோலியின் சமகாலத்தில் விளையாடும் இந்நாள் வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறும்பொழுது “விராட் கோலி ஒரு அபாரமான வீரர். அவர் எப்பொழுதும் பெரிய கேம்களில் சிறப்பாக விளையாடுவார். அவர் இந்தியாவுக்காக பெரிய கேம்களில் அதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் விராட் கோலியின் மிக அருமையான தருணம் அது. அப்பொழுது ரசிகர்கள் என்னை பந்தைச் சேதப்படுத்திய பிரச்சனைக்கு கேலி செய்து கொண்டு இருந்தார்கள். விராட் கோலி அவர்களிடம் என்னை ஆதரிக்க சொல்லி கேட்டார். அது விராட் கோலியின் சிறப்பான ஒன்று. நான் அதற்காக அவரை மிகவும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement