Advertisement

ஸ்டீவ் ஸ்மித் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் - விராட் கோலி!

இந்த தலைமுறையின் எந்த கிரிக்கெட் வீரரை எடுத்துக் கொண்டாலும் ஸ்டீவ் ஸ்மித் போல இல்லை என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

Advertisement
Steve Smith is best Test batter of this generation: Virat Kohli
Steve Smith is best Test batter of this generation: Virat Kohli (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 08, 2023 • 04:28 PM

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கி ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 08, 2023 • 04:28 PM

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய இந்திய அணியால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை எதுவுமே செய்ய முடியவில்லை. குறிப்பாக ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் இணைந்து இந்திய அணி பந்துவீச்சாளர்களை திணறவைத்தனர்.  

Trending

மிகச் சிறப்பாக விளையாடிய ஹெட் நேற்று 156 பந்தில் 146 ரன்கள் குவித்து களத்தில் ஆட்டம் இழக்காமல் நின்றார். அவருடன் ஸ்மித் 95 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் நின்றார். இன்று போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் தனது 31 வது சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார். அவருக்கு அடுத்து ஹெட் தனது 150 ரன்னை எட்டினார்.

இருவரும் நேற்று ஆட்டத்தை எந்த இடத்தில் எந்த மாதிரியான வேகத்தில் விட்டார்களோ அதே இடம் அதே வேகத்தில் இருந்து தற்பொழுது தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்மித் பற்றி விராட் கோலி கூறுகையில் , ‘என்னைப் பொருத்தவரை ஸ்டீவ் ஸ்மித் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவருடைய தகவமைப்பு திறன் முற்றிலும் புத்திசாலித்தனமானது. இந்த தலைமுறையின் எந்த கிரிக்கெட் வீரரை எடுத்துக் கொண்டாலும் அவர் போல இல்லை.

அவர் 85 – 90 டெஸ்டில் 60க்கும் மேற்பட்ட ரன் சராசரி தொடர்ந்து வைத்திருக்கிறார். இது நம்ப முடியாத ஒன்று. ரன்களை நிலைத்தன்மையாகத் தொடர்ந்து அவர் அடிப்பது போல கடந்த பத்து வருடத்தில் எந்த வீரரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்து நான் பார்க்கவில்லை. இதற்கான பெருமை அவரது திறமை மற்றும் மனோபாவத்திற்குச் சேரும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement