
Steve Smith Reclaims Number 1 Spot On ICC Test Rankings (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பிடித்துள்ளார். 891 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோலஸ் எட்டாவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அதே போல இந்தியா அணியின் ரிஷப் பந்த், ரோகித் ஷர்மா ஆகியோர் 747 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளனர்.